USI பற்றி!
Unique Student Identifier (பிரத்தியேக மாணவர் அடையாளம் (USI)) என்றால் என்ன?
Unique Student Identifier (பிரத்தியேக மாணவர் அடையாளம் (USI)) என்பது ஆஸ்திரேலியாவில் திறன் பயிற்சி பெறும் மாணவர்களது குறியீட்டு எண்ணாகும்.
USI ஒரு இணையக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. 1 ஜனவரி 2015 முதல் முடிக்கப்பட்ட உங்கள் அனைத்து பயிற்சிப் பதிவேடுகள் மற்றும் முடிவுகள் அதில் உள்ளன.
ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போதோ அல்லது மேற்கொண்டு படிக்கும்போதோ நீங்கள் உங்கள் பயிற்சிப் பதிவேடுகளையும், முடிவுகளையும் புதிய முதலாளியிடமோ அல்லது பயிற்சிப் பள்ளியிலோ சமர்ப்பிக்க வேண்டியதிருக்கும்.
நீங்கள் உங்கள் தேர்வு முடிவுகளையும், பதிவேடுகளையும் உங்கள் கணினி, இணையப் பலகை (tablet) அல்லது கைத்தொலைபேசியில் இருந்து USI இணையக் கணக்கின் வழியாக அணுகமுடியும்.
USI யாருக்குத் தேவைப்படும்?
1 ஜனவரி 2015 முதல் திறன் பயிற்சி பெறும் மாணவர் அனைவருக்கும். இதில் TAFE அல்லது தனியார் திறன் பயிற்சிப் பள்ளியில் படிப்பதும், தொழிற்பயிற்சி கற்றுக்கொள்வதும், சான்றிதழ் அல்லது பட்டயப்படிப்பு படிப்பதும் அடங்கும்.
USI-ஐ நீங்கள் பெற வேண்டிய அவசியம் என்ன?
திறன் பயிற்சிபெறும் மாணவர்கள் தங்களது பயிற்சியை முடிப்பதற்கு முன் USI-ஐப் பெறவேண்டுமென சட்டம் ௯றுகிறது.
USI-ஐ நான் எவ்வாறு பெறுவது?
நீங்கள் அடையாளப் படிவம் ஒன்றை தயாராக வைத்திருந்து உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்கவும் தெரிந்திருந்தால், ஒரு இணைய USI-க்கு விண்ணப்பிக்க முடியும். உங்களுக்கு ஆங்கிலம் வாசிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு நண்பரோ அல்லது குடும்ப உறுப்பினரோ தேவைப்படலாம். USI-க்கு விண்ணப்பிக்க உங்கள் பயிற்சிப் பள்ளியும் உதவிபுரிய முடியும்.